மஹாத்மாவின் மறக்கமுடியாத மொழிகள்...
மிக மென்மையான முறையில் இந்த உலகையே அசைக்கலாம்.


பலவீனர்களால் மன்னிக்க முடியாது. மன்னித்தல் பலவான்களின் பண்பு.


என் அனுமதியின்றி யாரும் என்னைப் புண்படுத்த முடியாது.


நீ எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறாய் என்பது உன் செயலில் தெரிந்துவிடும்.


இந்த உலகில் உண்மையான அமைதியைக் கற்பிக்க வேண்டுமென்றாலும் போருக்கு எதிராகப் போரிட வேண்டுமென்றாலும் அதைத் தொடங்கவேண்டிய இடம் குழந்தைகள்.


ஒரு மனிதன் அவனது எண்ணங்களால் சமைக்கப்படுகிறான். எதை நினைக்கிறானோ, அதுவாகிறான்.


எவரையும் அழுக்குக் காலோடு என் மனதில் நடக்க நான் அனுமதிக்க மாட்டேன்.


ஒரு கோழையினால் அன்பு செலுத்த இயலாது; அது தைரியசாலியின் சிறப்புரிமை.

© TamilOnline.com