கணிதப் புதிர்கள்
1. 0, 1, 1, 2, 3, 5, 8, ... என்ற வரிசையில் அடுத்து வரும் எண் எது, ஏன்?
2. அது, ஐம்பதிலிருந்து நூறுக்குள் உள்ள இரண்டு இலக்கமுள்ள ஒற்றைப்படை எண். அதன் தலைகீழ் எண் ஒரு சதுர எண். முதல் எண்ணின் பாதிதான் இரண்டாவது எண் என்றால் அந்த ஒற்றைப்படை எண் எது?
3. ஒன்று விட்டு ஒன்றாக உள்ள ஐந்து வீட்டுக் கதவு இலக்கங்களின் கூட்டுத் தொகை 75 என்றால் அந்த எண்கள் எவை?
4. கீதாவிடம் உள்ள ஆப்பிள்களை ஒவ்வொருவருக்கும் நான்கு எனப் பிரிக்கும்போது மூன்று ஆப்பிள்கள் மீதம் இருக்கின்றன. ஒவ்வொருவருக்கும் ஐந்து எனப் பிரிக்கும்போது நான்கு ஆப்பிள்கள் மீதம் இருக்கின்றன. கீதாவிடம் இருந்த மொத்த ஆப்பிள்களின் எண்ணிக்கை எவ்வளவு?
5. அனிதா மற்றும் லலிதாவின் வயது 3: 4 என்ற விகிதத்தில் உள்ளது. இருவரது வயதின் கூட்டுத்தொகை 63 என்றால் அவர்களின் வயது என்ன?

அரவிந்த்

விடைகள்

© TamilOnline.com