சிந்தி கடி
தேவையான பொருட்கள்
கடலைமாவு - 2 மேசைக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
வெந்தயம் - 1 தேக்கரண்டி
பச்சைமிளகாய் - 3
இஞ்சி - 1 சிறுதுண்டு
மஞ்சள்பொடி - 1 சிறு ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
தயிர் - 2 கிண்ணம்
தக்காளி விழுது - 1/4 கிண்ணம்
புளி பேஸ்ட் - 2 தேக்கரண்டி
காய்கறிகள் - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப
நெய் - 2 மேசைக்கரண்டி
மிளகாய் - 2 அல்லது 3

செய்முறை
வாணலியில் நெய் விட்டு, சீரகம், வெந்தயம், பச்சை மிளகாய், இஞ்சி தாளிக்கவும். கடலை மாவை அதில் போட்டுப் பிரட்டி மஞ்சள் பொடி, உப்பு சேர்க்கவும். 1-1/2 கிண்ணம் தண்ணீர் விட்டுக் கொதி வந்ததும் தக்காளி விழுதும், புளி பேஸ்ட்டும் சேர்க்கவும். தயிரைக் கடைந்து 2 கிண்ணம் தண்ணீர் அதில் விட்டுக் கொதிக்கவிட்டு கறிவேப்பிலை போட்டு இறக்கவும். மிளகாய் தாளிக்கவும். பட்டாணி, பீன்ஸ், காரட், நறுக்கி வதக்கிப் போடலாம். காய்கறி இல்லாமலும் செய்யலாம். கடலை மாவில் தண்ணீர் விடும்போது கட்டி தட்டாமல் கிளறிக் கொதிக்கவிடவும். இது சுவையான கடி ஆகும்.

தங்கம் ராமசாமி,
பிரிட்ஜ்வாட்டர், நியூ ஜெர்சி

© TamilOnline.com