கலை இலக்கியத் திருவிழா
ஆகஸ்ட் 15, 2020 அன்று நந்தலாலா மிஷன் 'மறைந்திருக்கும் பொக்கிஷத்தைக் கண்டுபிடியுங்கள்' (Discover Hidden Treasures) என்ற கருத்திலமைந்த கலை, இலக்கியத் திருவிழா ஒன்றை ஆன்லைனில் நடத்தவிருக்கிறது. சிறுவருக்கான இந்த நிகழ்ச்சியில் பூஜ்யஸ்ரீ மதியொளி அவர்கள் எழுதிய 'புவனா தேடிய புதையல்' நூலின் ஆங்கில வடிவமான 'Bhuvana and the secret of the Hidden treasure' வெளியிடப்படும்.

மாணவர்களுக்கான ஓவியப் போட்டி ஒன்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஓவியங்களை ஆகஸ்ட் 8ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். போட்டியின் முடிவுகள் மேற்கண்ட திருவிழாவின் போது அறிவிக்கப்படும்.

போட்டி விதிகள்:
1. மாணவர்கள் K-8 வரையிலான வயதுப்பிரிவில் இருக்கவேண்டும்.
2. அமெரிக்கா அல்லது கனடாவில் வசிப்பவர்களாக இருக்கவேண்டும்.
3. போட்டிக்குச் சமர்ப்பிக்கப்படும் 2-D ஓவியம்/சித்திரம் எந்த மீடியத்திலும் இருக்கலாம். கணினி அல்லது தொழில்நுட்பம் பயன்படுத்திய வரைபடமாக இருக்கக்கூடாது.
4. அந்த மாணவரின் சொந்தப் படைப்பாக இருக்கவேண்டும்.
5. ஒருவர் ஒரு படம் மட்டுமே சமர்ப்பிக்கலாம்.
6. வயதுப்பிரிவு வாரியாக (K-2, 3-5, 6-8) பரிசுகள் உண்டு.

நுழைவுப் படிவம்: forms.gle

மேலும் அறிய:
மின்னஞ்சல்: nandalala@nandalala.com
தொலைபேசி: 408-681-9454

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com