பிளான் பண்ணி பண்ணனும்
மேற்கண்ட தலைப்பில் உருவாகி வரும் படத்தில் நாயகனாக ரியோ நடிக்கிறார். ரம்யா நம்பீசன் நாயகி. முன்னணி நடிக, நடிகையர் உடன் நடிக்கும் இப்படத்தை பத்ரி வெங்கடேஷ் இயக்குகிறார். இவர், ஏற்கனவே, 'பாணா - காத்தாடி' என்ற வெற்றிப்படத்தைத் தந்தவர். "இது ஒரு நகைச்சுவை, பொழுதுபோக்குப் படம். கதாநாயகன் செம்பியன் கரிகாலன் சென்னை ராயபுரத்தை சேர்ந்தவன். சந்தோஷமான வாழ்க்கை. வடசென்னையின் கூலிப்படை, போதைமருந்து இவற்றிலிருந்து விலகி, IT துறையில் வேலை செய்கிறான். கதாநாயகி அமெரிக்கா சென்று வேலை செய்யவேண்டும் என்ற குறிக்கோளுடன் வடசென்னையில் தங்கிப் படிக்கிறாள். அது என்ன ஆகிறது என்பதுதான் படம்" என்கிறார் பத்ரி வெங்கடேஷ்.

அரவிந்த்

© TamilOnline.com