பழுப்பரிசிப் பொங்கல்
தேவையான பொருட்கள்
பழுப்பரிசி (brown rice) - 2 கிண்ணம்
பயத்தம்பருப்பு - 3/4 கிண்ணம்
மிளகு - 2 மேசைக்கரண்டி
சீரகம் - 2 மேசைக்கரண்டி
பெருங்காயம் - சிறிதளவு
முந்திரிப்பருப்பு - 8
உப்பு - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை - சிறிதளவு
நெய் - 4 மேசைக்கரண்டி

செய்முறை: பழுப்பரிசியை ஒருமணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். பயத்தம்பருப்பை வெறும் வாணலியில் வாசனை வரும்படி வறுக்கவும். அரிசியின் தண்ணீரைக் கழுவி வடிக்கவும். அரிசியுடன் 5 1/2 கிண்ணம் நீர் வைத்து, பருப்பைப் போட்டு குக்கரில் வேகவைக்கவும். 6 அல்லது 7 விசில் வரட்டும். நெய்யில் முந்திரிப் பருப்பை வறுத்துக்கொண்டு மிளகு, சீரகம் பொடித்துப் போட்டு, பெருங்காயமும் போடவும். பிறகு வேகவைத்த அரிசி, பருப்பைப் போட்டு, உப்பும் கறிவேப்பிலையும் போடவும். நன்றாகச் சேர்ந்து கொதித்ததும் கிளறி இறக்கி வைத்துச் சாப்பிடவும். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மிக நல்லது இந்தப் பொங்கல். தக்காளிச் சட்னியுடன் சாப்பிடச் சுவையாக இருக்கும்.

தங்கம் ராமசாமி,
பிரிட்ஜ் வாட்டர், நியூ ஜெர்சி

© TamilOnline.com