பாக்ஸர்
அருண் விஜய் நடிப்பில் உருவாகும் படம் 'பாக்ஸர்'. கதாநாயகியாக ரித்திகா சிங் நடிக்கிறார். இயக்குநர் பாலாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய விவேக் இயக்குகிறார். இசை லியோன் ஜேம்ஸ். இப்படத்தில் நடிப்பதற்காக மலேசியா மற்றும் வியட்நாமில் குத்துச்சண்டை பயிற்சி பெற்றுள்ளார் அருண் விஜய். சண்டைப் பயிற்சி இயக்குநரான பீட்டர் ஹெய்ன், அருண் விஜய்க்குப் பயிற்சி அளித்துள்ளார். அதிரடி ஆக்‌ஷன் படம் இது என்கிறார் கோலிவுட் கோவிந்து.

அரவிந்த்

© TamilOnline.com