பன்னாட்டுத் திருக்குறள் மாநாடு
2005 ஜூலை 8-10 தேதிகளில் மேரிலாந்து மாநிலத்தின் கொலம்பியா நகரத்தில் பன்னாட்டுத் திருக்குறள் மாநாடு நடைபெற இருக்கிறது.

இதிலே முனைவர். வா.செ. குழந்தை சாமி, பேரா. ஜார்ஜ் ஹார்ட் போன்ற அறிஞர்களுடன் பல திருக்குறள் ஆராய்ச்சியாளர்களும் கலந்து கொள்வார்கள்.

முதன்முறையாக அரங்கேறும் திருக் குறள் நாட்டிய நாடகமும், பேரா. ஞானசம்பந்தத்தின் உள்ளத்தை அள்ளும் பேச்சும் உண்டு. தவிர, வள்ளுவரின் சிலை திறப்பு மாநாட்டின் சிறப்பு அம்சம்.

மாநாட்டில் கலந்து கொள்ளும் அமெரிக்கக் கல்லூரி மாணவர்கள் மேரிலாந்தின் மாண்ட்கோமரி கல்லூரி யின் மூன்று கல்லூரி மதிப்பீடுகளை (3 college credits) பெற்றுக் கொள்ளலாம்.

தமிழ் ஆர்வலர் அனைவரும் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் மாநாட்டிற்கு வருகை தந்து சிறப்பிக்க வேண்டுகிறோம்.

வள்ளுவரின் தத்துவங்களை உலகின் பிற அறிஞர்களின் தத்துவங்களோடு ஒப்பிடும் சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிகள், திருக்குறள் சிறப்புரை அனைத்திலும் திளைக்கவைக்கும் இந்த மாநாடு, ஒரு திருக்குறள் திருவிழாவாகவே நடக்கும்.

விரிவான விவரங்களுக்கு www.thirukkural2005.org

© TamilOnline.com