கணிதப் புதிர்கள்
1. வரிசையில் அடுத்து வரவேண்டிய எண் எது, ஏன்?
23, 23, 24, 22, ...

2. ஒரு கூடையில் ஆப்பிள், ஆரஞ்சு, மாம்பழம் சேர்த்து மொத்தம் 60 பழங்கள் இருந்தன. ஆரஞ்சைப்போல ஆப்பிள்களின் எண்ணிக்கை நான்கு மடங்கு. மாம்பழங்களின் எண்ணிக்கை ஆரஞ்சைவிட 6 அதிகம் என்றால் பழங்களின் தனித்தனி எண்ணிக்கை என்ன?

3. காலை 6.00 மணி துவங்கி மாலை 6.00 மணிவரை கடிகாரத்தின் பெரிய முள்ளும் சின்ன முள்ளும் எத்தனை முறை சந்தித்துக் கொள்ளும்?

4. ஆசிரியர் வைத்த ஒரு போட்டியில் வகுப்பு மாணவர்கள் எல்லோரும் வெற்றி பெற்றார்கள். பரிசுப்பெட்டியில் $1521 பணம் இருந்தது. மாணவர்களின் எண்ணிக்கையும், ஒவ்வொருவரும் பெற்ற தொகையும் ஒன்றுதான். அப்படியானால் மாணவர்கள் எத்தனை பேர், அவர்களுக்குக் கிடைத்த தொகை என்ன?

5. ராகேஷிடம் இருந்த சாக்லேட்டுக்களைப் போல இரண்டு மடங்கு லோகேஷிடம் இருந்தது. லோகேஷிடம் இருந்ததைப் போல இரண்டு மடங்கு யோகேஷிடம் இருந்தது. அவர்களிடம் இருந்த மொத்த சாக்லேட்டுக்களின் எண்ணிக்கை 56 என்றால், ஒவ்வொருவரிடமும் இருந்த சாக்லேட்டுக்கள் எத்தனை?

அரவிந்த்

விடைகள்

© TamilOnline.com