தந்தையர் தினம் (ஜூன் 19-ம் தேதி)
ஒரு தந்தை தனது பெண்குழந்தையை எப்போதும் ஓர் இளம் பெண்மணியாகவே மாற்றி வருகிறார். அவள் பெண் ஆனதும் மீண்டும் அவளைக் குழந்தையாக்குகிறார்.
- எனிட் பேக்னால்டு

நான் தொடர்ந்து தந்தை போன்றவர்களைத் தேடி வருகிறேன் என்பது என்னை இப்போதெல்லாம் வருத்துவதில்லை. இதற்குள் பல தந்தைகளைக் கண்டுவிட்டேன், அவர்கள் எல்லோரையும் தெரிந்துகொண்டதில் பெருமகிழ்ச்சியே.
- ஆலிஸ் வாக்கர்

தந்தையாக இருப்பது ஒரு நன்றிகெட்ட வேலை. எல்லோர் தேவையை நிரப்ப வேண்டும், அதே வேளையில் எல்லோருக்கும் எதிரியாகவும் இருக்க வேண்டும்.
- ஜே. ஆகஸ்ட் ஸ்ட்ரிண்ட்பெர்க்

தன் குழந்தையை அறியும் தந்தை ஒரு ஞானி.
- வில்லியம் சேக்ஷ்பியர்

என் தந்தை யாரென்பதல்ல முக்கியம்; என் நினைவில் அவர் யார் என்பதுதான் முக்கியம்.
- ஆன் செக்ஸ்டன்

ஆயிரம் ஆசிரியர்களைவிட ஒரு தந்தை உயர்ந்தவர்.
- ஆங்கிலப் பழமொழி

ஒரு வெற்றிகரமான தந்தையாக இருக்க ... இதுதான் விதி: குழந்தை பிறந்த முதல் இரண்டு வருடங்களுக்கு அதைப் பார்க்காதே.
- எர்னஸ்ட் ஹெமிங்வே

மனிதனுக்குத் தெரியும் எப்போது தனக்கு வயதாகிவிட்டது என்று; ஏனென்றால் அவன் தன் தந்தையைப் போல் தோற்றமளிக்கத் தொடங்கியிருப்பான்.
- காபிரியேல் கிராஸியா மார்க்குவெஸ்

குழந்தைப் பருவத்தில் ஒரு தந்தையின் அரவணைப்பை விட முக்கியத் தேவை வேறொன்றையும் என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை.
- சிக்மண்ட் ·பிராய்ட்

கைகள் காய்த்துப் போன ஒரு சிறிய மனிதன் தினமும் பதினைந்து பதினாறு மணி நேரம் உழைப்பதைப் பார்திருக்கிறேன். ஒருமுறை உண்மையிலேயே அவன் காலடியிலிருந்து உதிரம் கொட்டுவதைப் பார்த்தேன். இந்த நாட்டுக்குக் கல்வியறிவு இல்லாமல், பேசும் மொழிகூடத் தெரியாமல் வந்த அவன், நம்பிக்கை, உழைப்பு இவற்றைப் பற்றி நான் அறியவேண்டிய எல்லாவற்றையும் தன் வாழ்க்கையையே பாடமாகக் கற்பித்தான்.
- மரியோ குவோமோ

© TamilOnline.com