பேய் மாமா
வில்லன் ஒரு வெளிநாட்டின் தீயசக்தியுடன் தொடர்பு கொண்டு உயிர்க்கொல்லி வைரஸ் கிருமியை உருவாக்கி, பல கோடிகளைச் சம்பாதிக்கத் திட்டமிடுகிறான். அவனுடைய முகமூடியைக் கிழித்து உலக மக்களைக் காப்பாற்ற முயற்சிக்கிறார் உள்ளூர் சித்த வைத்தியர். அவரை வில்லன் கொன்று விடுகிறான். வைத்தியரின் ஆவி, கதாநாயகனுக்குள் புகுந்து வேலை செய்கிறது! நாயகனாக யோகிபாபு நடிக்கிறார். உடன் மாளவிகா மேனன், மனோபாலா, மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் சக்தி சிதம்பரம்.

அரவிந்த்

© TamilOnline.com