அந்தகாரம்
அர்ஜுன்தாஸ் நாயகனாக நடிக்கும் படம் இது. உடன் வினோத் கிஷன், மீஷா கோஷல், பூஜா ராமச்சந்திரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இசை: பிரதீப்குமார். இயக்குநர் அட்லீ தயாரிக்கும் இப்படத்தை, அறிமுக இயக்குநர் விக்னராஜன் இயக்குகிறார். படம் பற்றி இயக்குநர், "இது முழுக்க முழுக்க சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படம். சென்னையிலேயே படமாக்கப்பட்டுள்ளது. இதில் மூன்று கதைகள். அவை ஒன்றுக்கொன்று தொடர்போடு இருக்கும். படப்பிடிப்பை 2016ல் தொடங்கினோம், கடந்த ஆண்டு நிறைவடைந்தது. விரைவில் வெளியாகும்" என்கிறார்.

அரவிந்த்

© TamilOnline.com