பூமி
ஜெயம் ரவி கதாநாயகன். நிதி அகர்வால் கதாநாயகி. உடன் சரண்யா பொன்வண்ணன், தம்பி ராமையா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏற்கனவே ஜெயம் ரவியை வைத்து 'ரோமியோ ஜூலியட்', 'போகன்' ஆகிய வெற்றிப் படங்களைத் தந்த லக்ஷ்மண் இப்படத்தின் கதையை எழுதி, இயக்குகிறார். இசை டி. இமான். படம்பற்றி இயக்குநர் லக்ஷ்மண், "விவசாயிகளின் பிரச்சனைகளைப் படம் பேசும். தீர்வையும் சொல்லி இருக்கிறோம். விவசாயக் கதையாக இருந்தாலும் கதாநாயகனுக்கும், வில்லனுக்கும் நடக்கும் மோதலை வைத்து வணிகரீதிப் படமாக எடுத்துள்ளோம். படத்தில் அதிரடி சண்டைக் காட்சிகள் இருக்கும். ரசிகர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் படமாக இது இருக்கும்" என்கிறார்.

அரவிந்த்

© TamilOnline.com