பெல்பாட்டம்
கன்னடத்தில் வெளியாகிப் பெருவெற்றி பெற்ற படம் இப்படம், தற்போது அதே பெயரில் தமிழில் உருவாகிறது. கிருஷ்ணா நாயகன். நாயகியாக மகிமா நம்பியார். சரவணன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இசை சாம் சி.எஸ். கிருஷ்ணாவை வைத்து ஏற்கனவே கழுகு-1, கழுகு-2 படங்களைத் தந்த இயக்குநர் சத்யசிவா இப்படத்தை இயக்குகிறார். 1980களில் நடக்கும் கதையாக இப்படம் உருவாகி வருகிறது. காவல்துறை அதிகாரியாக ஆசைப்படும் கதாநாயகனுக்கு அது நிறைவேறாமல் போகிறது. பின் அவனே தனியார் துப்பறிவாளனாகி, குற்றங்களைக் கண்டுபிடிப்பதுதான் படத்தின் கதை.

அரவிந்த்

© TamilOnline.com