கலைந்து கிடக்குது உலகு
யுகங்கள் ஆகுமோ
முகங்கள் பார்க்க‌
முடிவில்லாது செல்லும்
முடக்கத்தால்!

கலைந்து கிடக்குது உலகு
கண்ணுக்குத் தெரியா
வைரஸ் ஒன்றினால்!

உலகை ஆள‌
இயற்கை அழித்தோம்
இயற்கை வாழ‌
இனி ஒரு விதி செய்வோம்
இணைந்து வாழ்வோம் இயற்கையுடன்
இனியுமோர் அழிவைத் தடுக்க!

அப்துல்லா ஜெக‌பர்தீன்,
பிளசன்டன், கலிஃபோர்னியா

© TamilOnline.com