சாம் கண்ணப்பன்
சாலைப் பாதுகாப்பு தொடர்புள்ள வாரியத்துக்கு சாம் கண்ணப்பன் நியமனம்

அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலம் 'ஒன்-கால் போர்டு' அமைப்பின் உறுப்பினராக ஹூஸ்டனில் வசிக்கும் முனைவர் சொக்கலிங்கம் என்ற சாம் கண்ணப்பன் அவர்களை டெக்சஸ் மாநில கவர்னர் திரு கிரீக் அபோட் நியமித்து உத்தரவிட்டுள்ளார். இந்த வாரியத்தில் ஆகஸ்ட் 8, 2022 வரை சாம் கண்ணப்பன் பதவி வகிப்பார்.

குழாய்கள் போன்றவற்றைப் பதிப்பதற்கென சாலைகளைத் தோண்டுவதற்கு முன், அவற்றுக்குப் பொறுப்பேற்றுள்ள நிறுவனங்கள் தங்கள் திட்ட அறிக்கையை இந்த ஒன்-கால் போர்டுக்குத் தெரிவிக்க வேண்டும். அதனைப் பரிசீலித்து எங்கே சாலை தோண்டப்படுகிறதென்பதை வாகன ஓட்டிகளின் கவனத்துக்குக் கொண்டுசென்று, சாலை விபத்துக்களைத் தடுப்பது இந்த அமைப்பின் முக்கியப் பணி.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com