அமெரிக்காவில் ஆதிபராசக்தி திருக்கோவில்
மேல்மருவத்தூர் அருள்திரு பங்காரு அடிகளார் நிறுவிய ஆதிபராசக்தி இயக்கம் 4500 வார வழிபாட்டு மன்றங்களுடன் உலகெங்கிலும் பரவியிருக்கிறது. இவை ஆன்மீக வழிநிற்கும் சமுதாய சேவைக் கூடங்களாகச் செயல்பட்டு வருகின்றன.

அமெரிக்காவிலும் வேரூன்றி நிற்கிறது இவ்வியக்கம். தற்பொழுது நியூயார்க், நியூ ஜெர்ஸி, பென்சில்வேனியா, வாஷிங்டன் டி.சி., மேரிலாந்து, இல்லினாய், கேன்ஸாஸ் மற்றும் கலி·போர்னியா மாநிலங்களில் வாரவழிபாட்டு மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. பென்சில்வேனியா மாநிலத்தில், செஸ்டர் ஸ்பிரிங்ஸ் நகரத்தில் 25 ஏக்கர் நிலம் மற்றும் வீட்டை 2000-ஆம் ஆண்டில் அமெரிக்க ஆதிபராசக்தி நிறுவனம் வாங்கியது. அதிலே அருள்திரு பங்காரு அடிகளாரின் தலைமையில் கோயிலுக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இத்தலத்தில் இவ்வாண்டு செப்டம்பர் மாதத்திற்குள் கோயில் எழுப்புவதற்கான முயற்சியில் நிர்வாகக்குழு இறங்கியுள்ளது. பணியின் முதற்கட்டமாக வாகனப்பாதை அமைக்கும் வேலை தொடங்கப்பட்டுவிட்டது. இப்பணிக்காக இந்தியாவிலிருந்து ஸ்தபதிகள் வருவதால், அவர்கள் தங்குவதற்காக வீடு புதுப்பிக்கப்படுகிறது.

கருவறை அம்மனின் திருவுருவச்சிலை தற்பொழுது அமெரிக்காவின் கிழக்கு, மத்திய மேற்கு மற்றும் மேற்கு மாநிலங்களில் கரிகோலம் சென்று கொண்டிருக்கிறது. மற்றைய கோயில்களைப் போல உற்சவ மூர்த்தி உலா அல்லாது மூலஸ்தான கருவறை அம்மன் சிலையே இங்கே உலா வருகிறது. இந்த கரிகோலத்தின் போது ஆதிபராசக்தி திருவுருவச் சிலையை இல்லத்திற்கு அழைக்கின்றவர்கள், அவர்கள் கரங்களினாலேயே ஐந்து வகை அபிஷேகம், அலங்காரம், குங்கும அர்ச்சனை செய்து அன்னையை வணங்கும் இந்த அரிய வாய்ப்பைப் பெறுகிறார்கள்.

அம்மாவின் கரிகோலம் இவ்வாண்டு ஜூன் முதல் ஆகஸ்ட் வரை நியூ ஜெர்ஸி, நியூயார்க், கனெக்டிகட், பென்சில்வேனியா, மேரிலாந்து ஆகிய மாநிலங்களில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறது. பயணம் முடிந்தபின்னர் திருவுருவம் கருவறையில் நிறுவப்பட்டுக் கும்பாபிஷேகம் நடைபெறும்.

கோயில் கட்டும் திருப்பணிக்கு ஆகும் மதிப்பீட்டுத் தொகை $700,000. திருக்கோயில் எழுப்பும் திருப்பணிக்கு நன்கொடை தந்து குருவருளையும் அன்னை யின் திருவருளையும் பெறலாம்.

உங்களுடைய நன்கொடைகளை A.C.M.E.C of North America என்ற பெயரில் காசோலை அல்லது வரைவோலையாக அனுப்ப வேண்டிய முகவரி:

ACMEC of North America,
P.O.Box 1485,
Blue Bell,
Pennsylvania – 19422, U.S.A.

நன்கொடைகளுக்கு வரி எண்:
22-3440589-ன் கீழ் வருமான வரி விலக்கு உண்டு.
மேலும் விபரங்களுக்கு:
தொலைபேசி: 1- 877-SAKTHIS
இணையத்தளம்: www.sakthiusa.org

வேலுப்பிள்ளை

© TamilOnline.com