கர்நாடக சங்கீதப் பெருவிழா 2020
மார்ச் 22, 2020 ஞாயிறன்று மதியம் 1:00 மணிமுதல் சான் ஹோசே பாலாஜி திருக்கோவில் ஆனந்தா அரங்கத்தில் 'கர்நாடிக் ப்ரீமியர் லீக் 2020' என்ற பெயரிலான மாபெரும் கர்நாடக சங்கீதத் திருவிழா நடைபெறும். பிரபல கர்நாடிகா பிரதர்ஸ் கலைமாமணி திரு K.N. சசிகிரண் மற்றும் திரு சித்ரவீணா P. கணேஷ் ஆகியோரின் சிஷ்யர்கள் இயக்குகின்ற விரிகுடாப்பகுதி இசைப்பள்ளிகளின் மாணவர்கள் இணைந்து இதனை வழங்குகிறார்கள். கர்நாடக இசையின் இருபது அம்சங்களைப் பற்றி, இருபது மாணவர் குழுக்களை அமைத்து, அரிய பாடல்களைப் பாடியும், கருவிகளை இசைத்தும் கச்சேரி நடத்த இருக்கின்றார்கள்.

இறுதியாக கர்நாடிகா சகோதரர்களின் சிறப்புக் கச்சேரி நடைபெறும். இதில் திரு M.A. சுந்தரேசன் (வயலின்) மற்றும் திரு K.V. பிரசாத் (மிருதங்கம்) வாசிப்பார்கள்.

ரசிகர்கள் அனைவரும் கலந்துகொண்டு இசைப் பெருவிழாவைச் சிறப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வெங்கடேஷ் பாபு

© TamilOnline.com