சாரல்
காதல் + நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகிறது இப்படம். நாயகனாக தொலைக்காட்சித் தொகுப்பாளர் அஸார் நடிக்கிறார். ஸ்ரீ பிரியங்கா நாயகி. உடன் காதல் சுகுமார், பவர் ஸ்டார் சீனிவாசன், கோபாலகிருஷ்ணன், கோவை பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இசை: இஷான் தேவ். இயக்கம்: டி.ஆர்.எல். "வில்லன் கூட்டத்தில் முதல்நிலை அடியாளாக வேண்டும் என்று விரும்புகிறார் பவர் ஸ்டார். அவரது ஆர்வக்கோளாறால் ஏற்படும் விளைவுகளை சிரிக்கச் சிரிக்கச் சொல்கிறோம். பேருந்துப் பயணிகளை நம்பவைத்து ஏமாற்றும் கதாபாத்திரத்தில் வயிறு குலுங்கச் சிரிக்க வைப்பார் கோவை பாபு" என்கிறார் இயக்குநர்.

அரவிந்த்

© TamilOnline.com