பேட்டரி
வஸந்த், மணிரத்னம், சரண் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய மணி பாரதி கதை எழுதி, இயக்கும் படம் இது. நாயகனாக செங்குட்டுவன் நடிக்க, நாயகியாக அம்மு அபிராமி நடிக்கிறார். வசனத்தை ரவிவார்மா பச்சையப்பன் எழுதியிருக்கிறார். "இது ஒரு க்ரைம் த்ரில்லர். ஏழைகளுக்கு மருத்துவம் பெரும் சவாலாக மாறியிருக்கிறது. மருத்துவத் துறையில் நடக்கும் முறைகேடு ஒரு குடும்பத்தை எப்படி பாதிக்கிறது என்பதைப் பதைக்கவைக்கும் காட்சிகளாகப் படமாக்கியுள்ளோம்" என்கிறார் இயக்குநர்.

அரவிந்த்

© TamilOnline.com