அஸ்பாரகஸ் வதக்கல்
தேவையான பொருட்கள்

அஸ்பாரகஸ் தண்டுகள் - 20
உப்பு - தேவைக்கேற்ப
மிளகுப் பொடி - தேவைக்கேற்ப
ஆலிவ் எண்ணெய் - 2 தேக்கரண்டி

செய்முறை

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு அதில் சில பனிக்கட்டிகளைப் (Ice cubes) போட்டு வைக்கவும். மற்றொரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து உப்புச் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

அஸ்பாரகஸை இதில் போட்டு 2 நிமிடங்கள் வேகவிடவும். அஸ்பாரகஸை மூடி வேக வைத்தால் அதன் பசுமை நிறம் மாறிவிடும், எனவே மூடாமல் வேக வைக்கவும். வெந்தபின் அஸ்பாரகஸை வடிகட்டி பனிக்கட்டிப் பாத்திரத்தில் உடனே போடவும்.

அரை நிமிடம் கழித்துத் தண்ணீர் சிறிதுகூட இல்லாமல் வடித்துவிட்டு, சாப்பிடும் தட்டில் போட்டு ஆலிவ் எண்ணெய், உப்பு, மிளகுப் பொடி கலந்து (toss செய்து) சூடாகவோ ஆறியோ சாப்பிடவும்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com