'சன்மார்கா' - சரியான பாதை
ஜனவரி 18, 2020 அன்று, மதியம் 4.30 மணிக்கு, லிவர்மோர் சிவா விஷ்ணு ஆலயத்தின் லக்கிரெட்டி அரங்கில் ஸ்ரீ வித்யாலயா நடனப்பள்ளி (கலிஃபோர்னியா) மற்றும் நிருத்யாலயா கவின் கழகம் (அரிசோனா) இணைந்து அகிலா ராவ் மற்றும் ஷைலா கணேசனின் பரதநாட்டிய நிகழ்ச்சியான 'சன்மார்கா -The Right Path' என்ற நிகழ்ச்சியை வழங்குகின்றன. புருஷன் மற்றும் பிரகிருதியின் பாதையை இந்த நடனத் தொகுப்பு முன்வைக்கும். ஆணும் பெண்ணும் ஒருவரில்லாமல் ஒருவர் வாழ்வது கடினம். உலகில் சமநிலையைப் பேணவும், பிரபஞ்சத்தில் மனரீதியான, ஆன்மீக ரீதியான ஆரோக்கியம் இருக்க இருபாலரும் முக்கியம் என்ற கருத்தை ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதர் அத்வைத தத்துவத்தின் மூலம் அழகாக விவரித்துள்ளார்.

இந்த நடன நிகழ்ச்சியில் விரிகுடாப்பகுதி இசைக்கலைஞர்களான திருமதி ஸ்னிக்தா வெங்கடராமணி (குரல்), திருமதி சேதனா சாஸ்திரி (நட்டுவாங்கம்), திரு ரவீந்திரபாரதி ஸ்ரீதரன் (மிருதங்கம்/கஞ்சிரா), திரு விக்ரம் ரகுகுமார் (வயலின்) திருமதி ஐஸ்வர்யா வெங்கட் (சூத்திரதாரி) ஆகியோர் பங்கேற்பர்.

நுழைவுச் சீட்டுகளை வங்க: sanmarga2020.brownpapertickets.com
மேலும் அறிய: facebook.com
தொலைபேசி: 972-697-1252

செய்திக் குறிப்பிலிருந்து

© TamilOnline.com