SKCC: ஸ்ரீ மஹாபெரியவர் 26வது ஆராதனை
ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 26வது ஆராதனை ஸ்ரீ காமாக்ஷி சமூக மையத்தினால் (SKCC, சான்ட கிளாரா, கலிஃபோர்னியா) டிசம்பர் 14 முதல் 23 வரை சிறப்பாக நடத்தப்பட்டது.

சிறப்பு பூஜைகள், ஆராதனை நிகழ்ச்சிகளை ஸ்ரீ சந்திரமௌலி நாராயண சாஸ்திரிகள் தன்னார்வத் தொண்டர்களுடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்தார்கள்.

டிசம்பர் 14 அன்று விரிகுடாப்பகுதிக் கலைஞர்கள் பங்கேற்ற சங்கீத ஆராதனை சிறப்பாக நடைபெற்றது. டிசம்பர் 22 அன்று நெவார்க் நகரில் உள்ள நெவார்க் பெவிலியனில் கணபதி பூஜை, புண்யாகவசனம், அபிஷேகம், ஸ்ரீருத்ரம், திருப்புகழ் பஜனை, திருவீதி உலா, மங்கள ஆரத்தி, மந்திர புஷ்பம், தீர்த்தம் மற்றும் பிரசாத வினியோகம் நடந்தன.

ஆராதனையை முன்னிட்டு டிசம்பர் 14 முதல் 22 வரை விஷ்ணு சஹஸ்ர நாம லட்சார்ச்சனை நடைபெற்றது.

விழாவின் சிறப்பம்சமாக தங்கரதத்தில் மகாபெரியவர் செண்டை மேளம் முழங்க ஊர்வலம் வந்தது கண்கொள்ளாக் காட்சி. டிசம்பர் 23 அன்று மகாபெரியவர் அனுஷ பூஜை ஸ்ரீ காமாட்சி கோவிலில் விமரிசையாக நடந்தது.

ராஜேஸ்வரி ஜெயராமன்,
சான்ட கிளாரா, கலிபோர்னியா

© TamilOnline.com