சோமலெ நூற்றாண்டு தொடக்கவிழா
'உலகம் சுற்றிய தமிழர்' அறிஞர் சோமலெ அவர்கள் நூற்றாண்டின் தொடக்க விழா, அவர் பிறந்தமண் நெற்குப்பையில் (சிவகங்கை மாவட்டம்), சோமலெ நினைவு நூலகத்தில் 2020 பிப்ரவரி 11 அன்று நடைபெறவுள்ளது. திரு சோமலெ, தமது தந்தையார் நினைவாகக் கட்டிய அருள்மிகு சோமசுந்தர விநாயகர் கோவிலின் கும்பாபிஷேகம், பிப்ரவரி 12 அன்று மதுரை மாவட்டம் மேலூர் அருகிலுள்ள பேப்பனையம்பட்டியில் நடைபெறும். அவர் எழுதிய நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களைப் படித்தவர்களோடும், அவரை அறிந்தவர்களோடும் இச்செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள். மேலும் விபரங்கள் பின்னர் வெளியிடப்படும்.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com