குபேரன்
மம்முட்டி, மீனா, ராஜ்கிரண் உள்ளிட்டோர் இதில் நடிக்கின்றனர். தமிழ், மலையாளம் என இரு மொழிகளிலும் தயாராகிறது. இப்படத்தின் மூலம் மலையாளத் திரையுலகில் முதன்முதலாக அடியெடுத்து வைக்கிறார் ராஜ்கிரண். கலாபவன் ஷாஜன் வில்லனாக நடிக்க, முக்கிய வேடத்தில் நடிகர் சித்திக் நடிக்கிறார். கதையை பிபின் மோகன்-அனீஸ் ஹமீது எழுத, ராஜ்கிரண் வசனம் எழுதியிருக்கிறார். பிரபல மலையாள இயக்குனர் அஜய் வாசுதேவ் இயக்குகிறார். பாடல்களை ராஜ்கிரண், விவேகா எழுத கோபிசுந்தர் இசையமைத்துள்ளார். விரைவில் வருவான் குபேரன்.

அரவிந்த்

© TamilOnline.com