உலகின் கவனத்தை ஈர்க்கும் 'காவேரி அழைக்கிறது'
காவேரிப் பாசனப்பகுதிகளில் 2.4 பில்லியன் மரங்களை நடும் திட்டமான சத்குரு அவர்களின் 'காவேரி அழைக்கிறது' உலக அளவில் ஆதரவு பெற்று வருகிறது. "மண்வளத்தை மீட்கவும், நதிகளுக்குப் புத்துயிர் தரவும், விவசாயியின் வருமானத்தைப் பெருக்கவும் 'காவேரி அழைக்கிறது' மிகக் கவனமாகத் தீட்டப்பட்டுள்ள முன்னோடித் திட்டமாகும். இது இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவில் பயன் தரும்" என்கிறார் ஈஷா அறக்கட்டளையின் நிறுவனரான சத்குரு. காவேரிப் படுகையில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள், இந்தத் திட்டத்தின்மூலம் வேளாண் காடுகளை வளர்க்கும் (agro-forestry) தொழிலுக்கு மாறுகையில், அவர்களுடைய வருமானம் 300 முதல் 800 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. 84,000,000 விவசாயிகளின் வாழ்வாதாரமாக அமைந்துள்ள காவேரி வறண்டு வரும் நிலையில், இந்தப் புத்துயிர் தரும் முயற்சிக்கு 45,000,000 மரங்களுக்கான நன்கொடை முதல் இரண்டு மாதங்களிலேயே பெறப்பட்டது.

பலவகை ஊடகங்களும் இந்த நற்செய்தியை உலகெங்கும் பரப்பிய காரணத்தால் அமெரிக்க நடிகர் லெனார்டோ டி காப்ரியாவின் அறக்கட்டளை உட்படப் பன்னாட்டு ஆதரவு குவிந்த வண்ணம் உள்ளது. பாரதப் பிரதமர் மோதி அவர்களும் மற்றும் பல இந்திய மாநிலங்களும் இத்திட்டத்தை ஆதரிக்கின்றன. சத்குரு அவர்கள் ஐக்கிய நாடுகளின் தலைவர்களுடன் உரையாடியதில் "அவர்கள் இதனைக் கூர்ந்து கவனிக்கிறார்கள். இந்தியாவில் இது வெற்றி கண்டவுடனே, இதை அவர்கள் வெப்ப மண்டலப் பகுதிகள் அனைத்துக்கும் கொண்டு செல்வார்கள்" என்கிறார்.

2019 செப்டம்பர் மாதம் சத்குரு தாமே இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த ஒரு மோட்டர்சைக்கிள் பேரணியை முன்னின்று நடத்தினார் (பார்க்க: படம்)

மேலும் விவரங்களுக்கு
தொலைபேசி: 510-913-3620
மின்னஞ்சல்: CauveryCalling@IshaUSA.org

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com