ஜவ்வரிசிக் கொழுக்கட்டை
தேவையான பொருட்கள்
ஜவ்வரிசி - 1 கிண்ணம்
அரிசி மாவு - 1/2 கிண்ணம்
நெய் - 2 தேக்கரண்டி
தேங்காய் (பூரணத்திற்கு) - 1 கிண்ணம்
முந்திரி - 6
சர்க்கரை - 3/4 கிண்ணம் (அல்லது)
வெல்லம் (சீவியது) - 1 சிறிய கிண்ணம்
ஏலக்காய் - சிறிதளவு

செய்முறை
ஜவ்வரிசியை நான்கு மணி நேரம் ஊறவிட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும். அரிசி மாவு போட்டு, சிட்டிகை உப்புப் போட்டு, வெந்நீர் விட்டு, நெய் சேர்த்துப் பிசைந்து வைக்கவும். தேங்காய்த் துருவலுடன் பொடித்த வெல்லம் அல்லது சர்க்கரை சேர்த்து, முந்திரியை நறுக்கிப் போட்டு, ஏலக்காய்ப் பொடி சேர்த்துப் பூரணம் செய்துகொள்ளவும். பிசைந்து வைத்துள்ள மாவைச் சிறு சிறு சொப்புகளாகச் செய்து, நடுவில் பூரணம் வைத்துக் கொழுக்கட்டை செய்து ஆவியில் வேகவைக்கவும். சுவையான கொழுக்கட்டை தயார்.

தங்கம் ராமசாமி,
பிரிட்ஜ்வாட்டர், நியூ ஜெர்சி

© TamilOnline.com