ஜவ்வரிசித் தோசை
தேவையான பொருட்கள்
ஜவ்வரிசி - 1/4 கிண்ணம்
பச்சரிசி - 1 கிண்ணம்
புழுங்கலரிசி - 1 கிண்ணம்
உளுத்தம்பருப்பு - 1/2 கிண்ணம்
உப்பு - சிறிதளவு
பெருங்காயம் - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - தோசை வார்க்க
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை
எல்லாவற்றையும் ஐந்து மணி நேரம் ஊறவிட வேண்டும். மாவு ஜவ்வரிசியாக இருக்கவேண்டும். நன்றாக அரைத்து, கால் மணி வைத்துவிட்டு உப்பு,. கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தோசை வார்க்கலாம்.

தங்கம் ராமசாமி,
பிரிட்ஜ்வாட்டர், நியூ ஜெர்சி

© TamilOnline.com