உளுந்தங் கஞ்சி
தேவையான பொருட்கள்
கருப்பு உளுந்து - 1/2 கிண்ணம்
பச்சரிசி - 1 மேசைக்கரண்டி
வெந்தயம் - 1 மேசைக்கரண்டி
கருப்பட்டி - தேவைக்கேற்ப
சுக்குப்பொடி - 1 தேக்கரண்டி
தேங்காய்த் துருவல் - 2 மேசைக்கரண்டி

செய்முறை
கருப்பு உளுந்து, பச்சரிசி, வெந்தயம் இவற்றை ஒன்றாகச் சேர்த்து 8 மணிநேரம் ஊறவைக்கவும். பிறகு அதை மிக்சியில் போட்டு, கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நல்ல வழுவழுப்பாக அரைக்க வேண்டும். அரைத்த மாவில் நான்கு மடங்கு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, விடாமல் கிளற வேண்டும். மாவு வெந்து கெட்டியாக வரும்போது அடுப்பை மிதமான தீயில் வைக்கவேண்டும். கருப்பட்டியில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து, மற்றொரு அடுப்பில் வைத்துச் சூடாக்கி, அந்தப் பாகை மண் இல்லாமல் வடிகட்டி, வெந்துகொண்டிருக்கும் மாவில் சேர்க்கவும். அத்துடன் சுக்குப்பொடி,தேங்காய்த் துருவல் சேர்க்கவும். நன்றாகச் சூடானதும் அடுப்பலிருந்து இறக்கிவிடவும்.

உளுந்தைத் தோலுடன் சாப்பிட்டால் உடம்புக்கு அதிக வலிமை சேர்க்கும் என்பது பெரியவர்கள் கருத்து.

மரகதம் அம்மா,
அட்லாண்டா, ஜார்ஜியா

© TamilOnline.com