தீபாவளித் திரைப்படங்கள்
தீபாவளிக்கு இரண்டு படங்கள் வெளியாகின்றன. அரங்குகள் கிடைத்தால் மேலும் சில படங்கள் வரக்கூடும்.

பிகில்



விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் இப்படத்தை அட்லீ இயக்கியிருக்கிறார். நயன்தாரா கதாநாயகி. ஜாக்கி ஷெராப் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இந்துஜா, ரெபா மோனிகா, விவேக், கதிர், டேனியல் பாலாஜி, தேவதர்ஷினி, கு,ஞானசம்பந்தன் யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். கதை, திரைக்கதைக்கு வசனங்களை அட்லீயும் ரமணகிரிவாசனும் இணைந்து எழுதியுள்ளனர். அதிரடி ஆக்‌ஷன் + த்ரில்லர் படமாம் இது. விஜய் இதில் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார் என்பது கொசுறு தகவல்.

கைதி



கார்த்தி நாயகனாக நடிக்கும் இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இவர் ஏற்கனவே 'மாநகரம்' என்ற வெற்றிப்படத்தைத் தந்தவர். நாயகியாக ராஷ்மிகா மந்தனா தமிழுக்கு அறிமுகமாகிறார். நரேன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். உடன் பொன்வண்ணன், தலைவாசல் விஜய், மகாநதி சங்கர், ரமணா, தீனா, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசை: சாம் சி.எஸ். முழுக்க முழுக்க இரவு நேரத்தில் நிகழும் சம்பவங்கள்தான் படத்தின் கதை. அதிரடி + ஆக்‌ஷன் கலக்கல் படம்தான் இதுவும்.

அரவிந்த்

© TamilOnline.com