ஆபரேஷன் அரபைமா


இந்திய இராணுவத்தில் அட்வெஞ்சர் பைலட்டாக பணிபுரிந்த ப்ராஷ் இயக்கும் படம் ஆபரேஷன் அரபைமா. ரகுமான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். உடன் அபிநயா, அரவிந்த் கலாதர், டினி டாம், கௌரி லஷ்மி ஷிஹாத், சாம்சன் டி. வில்சன், மனிஷா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். வசனத்தை இயக்குநர் ப்ராஷ், அரவிந்த் கலாதர், முருகன் மந்திரம் இணைந்து எழுதியுள்ளனர். பாடல்களை முருகன் மந்திரம் எழுத ராகேஷ் பிரம்மானந்தம் இசையமைத்துள்ளார். "நேர்மையும் துணிச்சலும் கொண்ட ஒரு கடற்படை அதிகாரியின் கதையைக் கருவாகக் கொண்ட சஸ்பென்ஸ் த்ரில்லர் இது. உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில், தமிழ், தெலுங்கு இருமொழிகளில் மிகுந்த பொருட்செலவில் நவீன தொழில் நுட்பத்தில் உருவாகிறது" என்கிறார் இயக்குநர்.

அரவிந்த்

© TamilOnline.com