காதலோடு கலந்து விடு
எல்லோருக்கும் சொல்லிய காதல் கதையை சற்று வித்தியாசமாக, அழகாக கூறுகிறார் 'காதலோடு கலந்து விடு' படத்தின் இயக்குநர் ஷேகர். இவர் இயக்குனர் மகாராஜனிடம் பல படங்களில் உதவியாளராகப் பணியாற்றியவர்.

பெஸ்ட் மூவி மேர்க்கர்ஸ் என்னும் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் நாயகனாக புதுமுகம் விமல் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக சேது படப்புகழ் அபிதா நடிக்கவிருக்கிறார். இவர்களுடன் செந்தில், ஆதி, பொன்னம்பலம், மன்சூர்அலிகான் என்று நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

பத்மன் மரியா இசையமைக்கவிருக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை வசனத்தை விஜயாஜி கவனிக்கிறார்.

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com