அர்ஜூன் இயக்கத்தில் 'மதராசி'
அதிரடி நாயகன் அர்ஜூன் 'மதராசி' என்கிற படத்தை இயக்குகிறார். இவரது இயக்கத்தில் உருவாகும் ஏழாவது படம் 'மதராசி'. இவருடன் தெலுங்கு படவுலகின் பிரபல நடிகர் ஜெகபதி பாபு முக்கியமான வேடத்தில் நடிக்கவிருக்கிறார்.

கஜலா, வேதிகா என்று இரண்டு நாயகிகள் இப்படத்தில் நடிக்கின்றனர். இவர்களுடன் மனோரமா, விவேக், விமல்ராஜ், வெண்ணிற ஆடை மூர்த்தி மற்றும் மாறன் நடிக்கவிருக்கின்றனர்.

இந்தி திரைப்படப் புகழ் முகேஷ் திவாரி, நிர்மல் பாண்டே ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கவிருக்கின்றனர். கே. எஸ். செல்வராஜ் ஒளிப்பதிவு. இசையை இமான் கவனிக்கிறார்.

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com