கண்டதை படிக்காதே


ஹாரர், மர்டர், மிஸ்டரி, ஆக்‌ஷன் இவற்றின் திகில் கலவையாக உருவாகி வருகிறது இப்படம். ஆதித்யா நாயகன். திருப்பாச்சி புகழ் பான்பராக் ரவி ஆர்யன் வில்லன். பிரீத்தி, சுஜி, வைஷாலி, ஜென்னி என நால்வர் புதுமுகக் கதாநாயகிகள். சபிதா ஆனந்த், தயாரிப்பாளர் சத்யாராம் முக்கிய வேடங்கள் ஏற்றுள்ளனர். இசை: செல்வா ஜானகிராஜ். முன்னர் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ஜோதி முருகன் இப்படத்தை இயக்குகிறார். இவர், "பிளாக்பஸ்டர் ஹிட் ஆகும் திரைக்கதை அமைப்பைக் கொண்ட படத்தை ஹாலிவுடில் ஹை கான்செப்ட் படம் என்பார்கள். இதில் எந்த நடிகர் நடித்தாலும் படத்தின் கதை அம்சமே படத்தை சூப்பர் டூப்பர் ஹிட்டாக்கிவிடும். இந்தப் படம் அப்படிப்பட்டது. ஆரம்பித்ததுமே ரசிகர்கள் அடுத்து என்ன நடக்கும் என்று எதிர்பார்க்கும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது" என்கிறார்.

தொகுப்பு: அரவிந்த்

© TamilOnline.com