பிரசாந்த் நடிக்கும் 'தகப்பன் சாமி'
தந்தைக்குப் பாடம் சொன்ன இளைஞன் ஒருவனைப் பற்றிய கதை ' தகப்பன்சாமி' என்கிற பெயரில் திரைப்படமாகிறது.

நாயகனாக பிரசாந்த் நடிக்கவிருக்க, இவருக்கு இணையாக மூன்று கதாநாயகிகள் நடிக்கவிருக்கின்றனர். நமிதா, சந்தியா மற்றும் புதுமுகம் சுஜா என்ற மூன்று கதாநாயகியர்கள் கொண்ட இப்படத்தை அமுதா துரைராஜ் வழங்க, திருமலை கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது.

தேவாவின் மகன் ஸ்ரீகாந்த் தேவா இப்படத்திற்கு இசையமைக்கிறார். இயக்குநர் ஹரியிடம் உதவியாளராகப் பணிப்புரிந்த ஷிவஷன் இப்படத்திற்குக் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் போன்றவற்றைக் கவனிக்கிறார்.

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com