'அந்நியனைத்' தொடர்ந்து 'மஜா'
நீண்ட நாட்களாக விக்ரம் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த சங்கரின் கனவுப் படம் 'அந்நியன்' வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 'அந்நியன்' திரைக்கு வந்த அன்று விக்ரமின் நடிப்பில் உருவாகவிருக்கும் 'மஜா' படத்திற்கான தொடக்க விழா நடைபெற்றது.

மலையாளத்தில் மம்முட்டி, பிஜுமேனன் நடித்த 'தொம்மனும் மக்களும்' என்கிற வெற்றிப் படத்தை விக்ரமிற்கு ஏற்றவாறு மாற்றித் தயாரிக்கின்றனர்.

'மஜா'வில் விக்கிரமின் நாயகியாக நடிக்கவிருக்கிறார் அஸின். பிதாமகனுக்கு ஒளிப்பதிவு செய்த பாலசுப்ரமணியன் இப்படத்திற்கான ஒளிப்பதிவைக் கவனிக்கிறார்.

படத்திற்கான இசை வித்யாசாகர். 'அந்நியன்' போல் 'மஜா'வும் பிரம்மாண்டமான தயாரிப்பாக இருக்கும் என்று பேசப்படுகிறது.

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com