அய்யா உள்ளேன் அய்யா


ஈரோடு சௌந்தர் இந்தப் புதிய படத்தை இயக்குகிறார். கதாநாயகனாக சௌந்தரின் பேரன் கபிலேஷ் அறிமுகமாகிறார். மற்றொரு நாயகனாக சௌந்தரின் தம்பி மகன் பால சபரீஸ்வரன் அறிமுகமாகிறார். பிரார்த்தனா கதாநாயகி. மனோபாலா, லிவிங்ஸ்டன், பாவா லட்சுமணன், நளினி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இசை மகேந்திரன். படம் பற்றி இயக்குநர், "மாணவர்களின் எதிர்காலம் என்பது 10ஆம் வகுப்பிலிருந்து 12ஆம் வகுப்புக் காலகட்டம் தான் என்பதை மனதில் வைத்து மாணவர்கள் செயல்பட்டால் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். கொஞ்சம் தடம் மாறினாலும் அவர்கள் வாழ்க்கை திசை மாறிவிடும் என்கிற கருத்தைச் சொல்கிற படம் இது" என்கிறார்.

அரவிந்த்

© TamilOnline.com