வைபவ் நடிக்கும் புதிய திகில் படம்


`காட்டேரி', `சிக்ஸர்' உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து வைபவ் புதிய படம் ஒன்றில் நாயகனாக நடிக்கிறார். வாணி போஜன் நாயகியாக நடிக்கிறார். ஈஸ்வரி ராவ், பூர்ணா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இயக்குநர் வெங்கட்பிரபு முக்கிய வேடத்தில் தோன்றுகிறார். இவருக்குப் போலீஸ் அதிகாரி வேடம். வைபவ், ஈஸ்வரி ராவ் இருவரும் போலீஸ் அதிகாரிகள். சஸ்பென்ஸ் கலந்த திகில் படமாக உருவாகும் இப்படத்தில் வெங்கட்பிரபு வில்லனாக நடிப்பதாகக் கிசுகிசுக்கிறார் கோலிவுட் கோவிந்து.

அரவிந்த்

© TamilOnline.com