தமிழ் பெயரில் திரைப்படங்கள்!
சமீபத்தில் தமிழக அரசு தமிழில் பெயர் வைக்கும் திரைப்படங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படும் என்று அறிவித்தது. இதனைத் தொடர்ந்து சூர்யா - ஜோதிகா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'ஜில்லுன்னு ஒரு காதல்' படத்தின் பெயரை 'சில்லுன்னு ஒரு காதல்' என்று மாற்றம் செய்து வெளியிட்டனர். அதுபோல் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த 'சம்திங் சம்திங்' திரைப்படத்தின் பெயரை 'உனக்கு எனக்கும்' என்று மாற்றம் செய்து வெளியிட்டனர்.

இந்த வகையில் செல்வா இயக்கத்தில் உருவாகி வரும் 'நெஞ்சில் ஜில் ஜில்' தற்போது 'நெஞ்சில்' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நவதீப் நாயகனாகவும், அபர்ணா நாயகியாகவும் நடிக்கும் இப்படத்தின் பாடல்காட்சிகள் பொள்ளாச்சி, சாலக்குடி போன்ற இடங்களில் நடைப்பெற்று வருகிறது. படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.

பாடல்காட்சி ஒன்று கறுப்பு-வெள்ளை ஃபிலிமில் படமாக்கப்பட்டது.

கேடிஸ்ரீ

© TamilOnline.com