தெரியுமா?: ஸ்லோன் நிதிநல்கை பெறும் அமெரிக்க இந்தியர்கள்
ஆல்ஃப்ரெட் ஸ்லோன் அறக்கட்டளை ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் மிகச்சிறந்த தொடக்கநிலை ஆராய்ச்சியாளர்களுக்கு உதவும் விதமாகத் தலா $70,000 நிதியை வழங்குகிறது. இதைப் பெற அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள ஆய்வாளர்கள் தகுதியுள்ளவர்கள். 2019ஆம் ஆண்டில் இதற்கெனத் தேர்ந்தெடுக்கப்பட்ட 126 பேரில் கீழ்க்கண்ட அமெரிக்க இந்தியர்கள் அடங்குவர்:

வேதியியல் (Chemistry)
சந்தீப் ஷர்மா (பௌல்டரில் உள்ள கொலராடோ பல்கலை)
திவாகர் சுக்லா (அர்பானா ஷாம்பேனில் உள்ள இல்லினாய் பல்கலை)

கணிப்பியல் மற்றும் பரிணாம மூலக்கூறு உயிரியல் (computational and evolutionary molecular biology)
ப்ரியா மூர்ஜானி (பெர்க்கலி பல்கலை)

கணினி அறிவியல் (computer science)
ரீதுபர்ணோ தாஸ் (மிச்சிகன் பல்கலை)

பொருளாதாரம்
நிகில் அகர்வால் (மாசசூஸட்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி)

கணிதம்
ஷிர்ஷேந்து காங்குலி (பெர்க்கலி பல்கலை)
பர்னா சஹா (ஆம்ஹெர்ஸ்ட்டில் உள்ள மாசசூஸெட்ஸ் பல்கலை)

நரம்பு அறிவியல் (neuroscience)
அர்ஜுன் கிருஷ்ணஸ்வாமி (மெக்கில் பல்கலை)
சேதன் பண்டரிநாத் (எமரி பல்கலை)
கனகா ராஜன் (ஐகாஹ்ன் மருத்துவப் பள்ளி, மவுண்ட் சைனாய்)

இயற்பியல் (physics)
ஆஸ்வத் ராமன் (லாஸ் எஞ்சலிஸில் உள்ள கலிஃபோர்னியா பல்கலை)
சாதனை படைக்கும் இந்திய அமெரிக்க ஆய்வாளர்களுக்கு வாழ்த்துகள். இவர்களின் எண்ணிக்கை பெருகுவதாக.

தொகுப்பு: மதுரபாரதி

© TamilOnline.com