தோப்பில் முகமது மீரான்
தமிழின் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவரும், சிறந்த இலக்கியவாதியுமான தோப்பில் முகமது மீரான் (74) காலமானார். கன்னியாகுமரி மாவட்டத்தின் தேங்காய்ப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் இவர். வணிகரான இவர், இளவயதில் தன் தந்தை எம்.ஓ. முகமதிடம் கேட்ட கதைகளால் இலக்கிய நாட்டம் கொண்டார். இஸ்லாமிய கலாசாரத்தைப் பின்புலமாகக் கொண்டு எழுத ஆரம்பித்தார். சுந்தர ராமசாமி, மாதவன் போன்ற எழுத்தாளர்கள் இவருக்கு ஊக்கம் தந்தனர். தந்தையிடம் கேட்ட கதைகளை விரித்து 'ஒரு கடலோர கிராமத்தின் கதை'யை எழுதினார். அதற்குக் கிடைத்த வரவேற்பு இவரை மேலும் எழுத வைத்தது. 'துறைமுகம்', 'கூனன் தோப்பு', 'சாய்வு நாற்காலி', 'அஞ்சு வண்ணம் தெரு' போன்றவை இவரது முக்கியமான நாவல்கள். 'சாய்வு நாற்காலி' நாவலுக்கு 1977ம் ஆண்டின் சாகித்ய அகாதமி விருது கிடைத்தது.

தோப்பில் முகமது மீரான் கதைகள்', 'ஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்', 'அன்புக்கு முதுமை இல்லை', 'தங்கராசு', 'அனந்தசயனம் காலனி', 'ஒரு குட்டித்தீவின் வரைபடம்' போன்றவை இவரது சிறுகதைத் தொகுப்புகள். மலையாளத்திலிருந்து ஐந்து படைப்புகளைத் தமிழில் பெயர்த்து அளித்துள்ளார். முகது மீரான் பற்றி மேலும் வாசிக்க

முகமது மீரானுக்குத் தென்றலின் அஞ்சலி.

© TamilOnline.com