கோமாளி


ஜெயம்ரவி நாயகனாக நடிக்கும் படம். காஜல் அகர்வால் கதாநாயகி. உடன் சம்யுக்தா ஹெக்டே, கே.எஸ். ரவிகுமார், யோகி பாபு, பொன்னம்பலம், `டெம்பிள் மங்கி' சாரா, `ரீல் அந்துப்போச்சு' ஆர்.ஜே. ஆனந்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பாடல்களை யுகபாரதி, மதன்கார்க்கி, அருண்ராஜா காமராஜ் எழுத, ஹிப்ஹாப் ஆதி இசையமைக்கிறார். பிரதீப் ரங்கநாதன் இயக்குகிறார். படம்பற்றி இயக்குநர், "'ஜெயம்' படத்திலிருந்து 'அடங்கமறு' வரைக்கும் ரவி சார் நிறைய படங்கள் பண்ணிட்டார்; பல ரோல்கள் பண்ணிட்டார். ஆனால், இது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். இந்தப் படத்தில் அவருக்கு 8 தோற்றங்கள். அதில் ஒரு கெட்டப்புக்காக 18 கிலோ எடை குறைச்சிருக்கார். முதலில் ஏதாவது கிராஃபிக்ஸ் பண்ணிக்கலாம்னு சொன்னேன். அவர்தான், "இல்ல... இதை நானே பண்றேன்"னு சொன்னார். இந்த லுக் வெளியில வரும்போது எல்லாருக்குமே ஆச்சர்யமா இருக்கும். படம் முழுக்கவே காமெடிதான்; ரொம்ப ஈடுபாடோட வொர்க் பண்ணிட்டு இருக்கார்" என்கிறார்.

அரவிந்த்

© TamilOnline.com