உயர்ந்த மனிதன்
அமிதாப் பச்சன் தமிழில் அறிமுகமாகும் படம் இது. சென்னையிலிருந்து மும்பை சென்ற சீனித்தேவர் என்ற பாத்திரத்தில் நடிக்கிறார். இதில் ரம்யா கிருஷ்ணன் அமிதாப்பின் மனைவி. எஸ்.ஜே. சூர்யா கதாநாயகன். மும்பையைச் சேர்ந்த பலர் முக்கிய வேடமேற்றுள்ளனர். இசை: ஏ.ஆர். ரஹ்மான். இயக்கம்: தமிழ்வாணன். இப்படம் பற்றி இயக்குநர் "அமிதாப்பச்சனை தமிழ்ப் படத்தில் நடிக்க வைப்பது மிகப்பெரிய சவாலாக இருந்தது. நான் சொன்ன கதை அவருக்குப் பிடித்ததால், தொடர்ந்து 40 நாள் கால்ஷீட் கொடுத்து நடித்து வருகிறார். இந்தியில் மட்டுமின்றி தமிழிலும் அவரே டப்பிங் பேசுகிறார்" என்கிறார். நிஜமாகவே 'உயர்ந்த' மனிதன்தான்.அரவிந்த்

© TamilOnline.com