கணிதப் புதிர்கள்
1. அது முப்பதிற்குள் உள்ள ஓர் இரண்டு இலக்க எண். அதிலிருந்து 9ஐக் கழித்தால் அது அந்த எண்ணின் தலைகீழ் எண்ணாகும். அந்த எண் எது?

2. ஏ, பி, சி, டி என்ற நான்கு எண்களின் கூட்டுத்தொகை 125. அந்த எண்களில் முதல் எண்ணுடன் 4ஐக் கூட்டினாலும், இரண்டாம் எண்ணிலிருந்து 4ஐக் கழித்தாலும், மூன்றாம் எண்ணை 4ஆல் பெருக்கினாலும், நான்காம் எண்ணை 4ல் வகுத்தாலும் வரும் விடை சமமாக இருக்கிறது. அந்த நான்கு எண்கள் எவை?

3. முப்பத்தொன்பதில் 49ஐக் கழித்தால் விடையாக 8 வரும். எப்படி?

4. 17, 15, 26, 22, ..., .... வரிசை எண்களில் அடுத்து வரும் எண் எது, ஏன்?

5. இரண்டு ஆட்கள், தினந்தோறும் இரண்டு மணி நேரம் வேலை செய்து இரண்டு நாட்களில் இரண்டு ஏக்கர் நிலத்தை செப்பனிடுகிறார்கள் என்றால், நான்கு ஆட்கள், தினமும் நான்குமணி நேரம், நான்கு நாட்கள் வேலை செய்து எத்தனை ஏக்கர் நிலத்தைச் செப்பனிடுவார்கள்?

அரவிந்த்

விடைகள்

© TamilOnline.com