காதல் முன்னேற்றக் கழகம்


காதலுக்கும் நகைச்சுவைக்கும் முக்கியத்துவம் கொடுத்து உருவாகியிருக்கும் இப்படத்தில் நடிகர் பாண்டியராஜனின் மகன் ப்ரித்விராஜன் நாயகனாக நடித்திருக்கிறார். சாந்தினி, கதாநாயகி. இயக்கம் மாணிக் சத்யா. இசை பி.சி. சிவன். படம் பற்றி இயக்குநர், "இந்தப் படத்தில் கார்த்திக் ரசிகராக நடிக்கிறார் பிருத்விராஜ். அவரைப்போலத் தலைமுடி வளர்த்து, பேசி, மேனரிசம் காட்டி நடித்துள்ளார். நடிகை சாந்தினி டீச்சர். நட்பில் துரோகம் பற்றிய உண்மைச் சம்பவத்தைக் கருவாகக் கொண்ட படம்" என்கிறார் இயக்குநர்.

தொகுப்பு: அரவிந்த்

© TamilOnline.com