தர்மபிரபு


விமல், வரலட்சுமி சரத்குமார் நாயக, நாயகியாக நடிக்கும் படம் தர்மபிரபு. உடன் யோகிபாபு, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். யோகிபாபுவுக்கு எமன் வேடம். சித்திரகுப்தனாக ரமேஷ் திலக் நடிக்கிறார். எமலோகத்தில் எமன் பதவி முடிவடையும் நிலையில், புதிய எமனைத் தேர்ந்தெடுக்கத் தேர்தல் நடக்கிறது. வாரிசு அடிப்படையில் யோகி பாபுவும், பதவி அடிப்படையில் ரமேஷ் திலக்கும் எமன் பதவிக்குப் போட்டி போடுகின்றனர். முத்துக்குமரன் இயக்குகிறார். முக்கிய வேடத்தில் நடிப்பதுடன் படத்திற்கான வசனத்தையும் யோகிபாபு எழுதியிருக்கிறார். இசை: ஜஸ்டின் பிரபாகரன்.

தொகுப்பு: அரவிந்த்

© TamilOnline.com