கணிதப் புதிர்கள்
1. 12, 23, 45, 89, .... இந்த வரிசையில் அடுத்து வரவேண்டிய எண் எது, ஏன்?

2. ஒரு கூடையில் 60 ஆப்பிள்கள் இருந்தன. அவற்றைச் சங்கர், காயத்ரி, சுரேஷ், ரமேஷ் நால்வரும் பங்கிட்டுக் கொண்டனர். ரமேஷிடம் இருந்த ஆப்பிள்களை விடச் சங்கர் 4 பழங்கள் அதிகம் வைத்திருந்தான். சுரேஷிடம் இருந்த பழங்களைவிட 4 பழங்களை அதிகமாக காயத்ரி வைத்திருந்தாள். காயத்ரியிடம் இருந்ததைவிட ரமேஷ் 4 பழங்கள் அதிகம் வைத்திருந்தான். ஒவ்வொருவரிடமும் இருந்த பழங்களின் எண்ணிக்கை எத்தனை?

3. ஒரு விருந்து நிகழ்ச்சியில் மொத்தம் 36 கை குலுக்கல்கள் நிகழ்ந்தன என்றால் அதில் எத்தனை பேர் கலந்து கொண்டிருப்பர்?

4. இரண்டு எண்களின் கூட்டுத்தொகை 108; அவற்றிற்கிடையே ஆன வித்தியாசம் 24. அந்த எண்கள் எவை?

5. ராமுவைவிட சோமு 5 செ.மீ. உயரம் அதிகம். சோமுவைவிட ஜீவா 5 செ.மீ. உயரம் அதிகம். ஜீவாவின் உயரத்தின் இரண்டடுக்கிலிருந்து (Square) ராமுவின் உயரத்தின் இரண்டடுக்கைக் கழித்தால் 3300 வருகிறது. அப்படியென்றால் ஒவ்வொருவரின் உயரமும் எவ்வளவு?

அரவிந்த்

விடைகள்

© TamilOnline.com