கலாலயா: ஸ்ரீ தியாகராஜ ஆராதனை
2019 ஏப்ரல் 27-28 நாட்களில் சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியில் தென்னிந்திய இசையைப் பரப்பி வரும் 'கலாலயா', ஸ்ரீ தியாகராஜ ஆராதனையை 5வது ஆண்டாக நடத்த உள்ளது. இது எவர்கிரீன் உயர்நிலைப்பள்ளியில் நடைபெறும்.

இந்த ஆண்டின் மையக்கருத்தாக சங்கீத ரத்னாகர திரு நெய்வேலி சந்தானகோபாலன் வழங்கும் 'ஸ்ரீ தியாகராஜரின் உத்சவ சம்பிரதாய கிருதிகள்' அமையும். நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக திரு நெய்வேலி சந்தான கோபாலன் அவர்களின் பிரம்மாண்டமான இசைக்கச்சேரி அமையும்.

விரிகுடாப்பகுதியில் இயங்கிவரும் பிரபல குரலிசை, வாத்திய, லயப் பள்ளிகளிலிருந்து தனிநபர்களும் குழுவினரும் இந்த விழாவில் பங்கேற்பர். திறன்வாய்ந்த இளம் இசைக்கலைஞர்கள் வழங்கும் வாய்ப்பாட்டு மற்றும் கருவியிசை கொண்ட சேர்ந்திசை நிகழ்ச்சி இவ்விழாவின் சிறப்பம்சம் ஆகும்.

'கலாலயா' திருமதி கலா ஐயர் அவர்களால் நிறுவப்பட்ட லாபநோக்கற்ற முன்னோடி கலை நிறுவனம் ஆகும். விரிகுடாப்பகுதியில் இது 20 ஆண்டுகளுக்கும் மேலாகக் கலைப்பணி செய்துவருகிறது.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com