மங்கி டாங்கி


குழந்தை வளர்ப்பில் அதிக கவனம் தேவை என்னும் கருத்தை வலியுறுத்தி உருவாகி வரும் படம் மங்கி டாங்கி. ஸ்ரீராம், கிஷோர், பேபி யுவினா, யோஜ்ஜைபீ மற்றும் வந்தனா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இசை: சூரஜ் குரூப். இயக்கம்: அபி ஆனந்த் - சலீஷ் சுப்ரமணியம். படம் பற்றி இயக்குநர்கள், "இயந்திர மயமான இந்தக் காலத்தில் குழந்தை வளர்ப்பு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. அன்புக்கு ஏங்கும் ஒரு குழந்தை கடத்தப்பட்டால் என்னவாகும் என்பதுதான் படத்தின் கதை" என்கிறார்கள்.

தொகுப்பு: அரவிந்த்

© TamilOnline.com