தமிழரசன்


வெளியாகத் தயாராக இருக்கும் 'கொலைகாரன்', 'அக்னிச் சிறகுகள்' படங்களைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி நாயகனாக நடித்துவரும் படம் தமிழரசன். நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். இயக்குநர் மோகன் ராஜாவின் மகன் பிரணவ் மோகன் இப்படத்தில் அறிமுகமாகிறார். முக்கிய வேடத்தில் யோகிபாபு நடிக்கிறார். இசை: இசைஞானி இளையராஜா. விஜய் ஆண்டனி படத்திற்கு முதன்முதலாக இசையமைக்கிறார் இளையராஜா. இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு காவல்துறை அதிகாரி வேடம் என்றும், ராஜாவின் இசையில் சொந்தக் குரலில் ஒரு பாடலை பாடியிருக்கிறார் என்றும் காதைக் கடிக்கிறார் கோலிவுட் கோவிந்து. ரம்யா நம்பீசனும் சொந்தக் குரலில் ஒரு பாடலைப் பாடியிருக்கிறாராம். அடடா...

தொகுப்பு: அரவிந்த்

© TamilOnline.com